

இராக்கில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் விரைவில் பாதுகாப்பாக நாடு திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" என்று கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி.
கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட நர்ஸ்கள் மொசூல் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விடுவிக்கப்பட்ட அவர்கள் இன்று எர்பில் நகரத்திலிருந்து இந்தியா புறப்பட்டுவிட்டனர்.