

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
வரி ஏய்ப்பைத் தடுக்க வருமான வரித்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இது தெரியவந்துள்ளது.
தனிநபர்கள், வர்த்தக மையங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற நிதிநிறுவனங்கள் மீது வருமான வரித்துறையின கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பெரும் தொகை கணக்கில் காட்டப்படாத வருவாயாக ஈட்டப்பட்டுள்ள விவரம் தெரிய வந்தது.
2012-13 நிதியாண்டில் மேற்கொண்ட நடவடிக்க்கைகளின் முடிவில் வந்த தொகையுடன் இப்போது வந்தடைந்துள்ள தொகை இரு மடங்கு அதிகம் என்கின்றனர் வருமான வரித் துறையினர்.
வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் மற்றும் சர்வேக்கள் மூலம் கணக்கில் காட்டப்படாத வருவாய் தொகை ரூ. 1,01,181 கோடி.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு வருமான வரித் துறையினர் பிறப்பித்த வாரண்ட்கள் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளதாக அந்தத் துறையினர் தெரிவித்துள்ளனர்.