மின்சாரம் பாய்ந்து 3 சகோதரர்கள் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள ஷேக்பேட் பகுதியில் அசன் (19) என்ற இளைஞர் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் அதில் இறங்கி சுத்தம் செய்ய முயன்றார்.

அப்போது மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் கேட்டு அவரது சகோதரர்களான ரிஜ்வான் (18), ரஜாக் (16) ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர். இதையடுத்து அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர்.

இத்துயர சம்பவம் குறித்து பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in