

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-1) அமைக்கப்பட்டு வரும் 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஜோஜிலா சுரங்கப் பாதை ஆசியாவிலேயே மிக பெரியதாகும். இதற்காக ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
2026-ம் ஆண்டு இந்த சுரங்கப் பாதை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளிர்காலத்தில் ஸ்ரீநகர்-லடாக் நெடுஞ்சாலை மூடப்படுவதால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து நிதின் கட்கரி மேலும் கூறியது: ககாங்கிரை சோன்மார்க்குடன் இணைக்கும் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அனைத்து கால நிலைகளிலும் இணைப்பை வழங்கும். இசட்-மார்க் சுரங்கப்பாதை இந்த ஆண்டு அக்டோபரில் திறக்கப்படும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப் பாதையாகும்.
வரலாற்றில் முதல் முறை. மைனஸ் 26 டிகிரியில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியாளர் இந்த பாதையை கட்டமைத்து வருகின்றனர்.
இத்திட்டம் நிறைவடைந்த வுடன் இப்பகுதியில் சுற்றுலா துறை 2-3 மடங்கு வளர்ச்சி காணும்என்பதுடன், காஷ்மீரில் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும். இந்த திட்டம் நிறைவேறும்போதுதான் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை இணைக்கும் கனவை உண்மையாக அடைவோம். இவ்வாறு கட்கரி கூறினார்.