பொய் செய்திகளை கண்டறிய விதிகளில் திருத்தம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அன்று, ‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் 2023’-ஐ வெளியிட்டது. செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்கான குழுவை அமைக்கும் அதிகாரம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வசம் இருக்கும் என்றும், ஒரு செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை இக்குழு முடிவெடுக்கும் என்றும் திருத்தப்பட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செய்தியின் உண்மைத் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய அரசு வசம் இருந்தால், கருந்துச் சுதந்திரம் பறிக்கப்படும். தனக்கு எதிராக வெளியாகும் செய்திகளை பொய்ச் செய்தி என்று வகைப்படுத்தி அவற்றின் மீது மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். இது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ‘தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் 2023’ குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “போலிச் செய்தி, பொய்ச் செய்தி, தவறான செய்தி ஆகியவற்றுக்கான வரையறை குறித்தும் அந்த விதிகளை திருத்துவது குறித்தும் கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in