

ராஞ்சி: கரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலர்களுடன் மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் ஆலாசனை நடத்தினார்.
அப்போது பேசிய ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆகஉயர்ந்துள்ளது. பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. அவர்கள் தங்கள் வீடுகளில்இருந்தே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா தடுப்பூசிகளின் இருப்பு குறைந்துவிட்டது. தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 50,000 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கும்படி நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால், அவை இன்னும் வரவில்லை. அவற்றை மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்களை ஜார்க்கண்ட்டில் மேலும் 4 இடங்களில் திறக்க அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பன்னா குப்தா கூறினார்.