Last Updated : 05 Jul, 2014 10:55 AM

 

Published : 05 Jul 2014 10:55 AM
Last Updated : 05 Jul 2014 10:55 AM

வீட்டுக்கு ரூ.10 கொடுப்போம், ஏழைகளின் உயிரைக் காப்போம்: பிஹார் மாவட்ட ஆட்சியரின் புதிய திட்டம்

ஏழை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, வீட்டுக்கு பத்து ரூபாய் நன்கொடை யாக வசூலிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் ஒரு மாவட்ட ஆட்சியர். இது தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் அமைப்பின் மூலம் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலம் கைமூர் மாவட்ட ஆட்சியர் அர்விந்த்குமார் சிங் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பத்தின ரிடம் தலா ரூ.10ஐ நன்கொடை யாக தரும்படி கேட்டுக் கொண் டிருக்கிறோம். இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உள்ளது. காரணம், உடனடி சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைக் காமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பலர் பரிதாபமாக உயிரிழக் கின்றனர் எனத் தெரிவித்தார்.

இந்த நன்கொடையை வசூலிப் பதற்காக, ‘பத்து ரூபாயில் ஓர் உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோஷம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் உள்ள 151 பஞ்சாயத்து தலைவர் கள் மூலமாக பெறவிருக்கும் இந்த நிதிக்காக, நான்கு லட்சம் கூப்பன் கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கைமூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க செலாளர் ராமேஷ்வர் பிரசாத் சிங் கூறும்போது, ‘இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த சில தினங்களில் ரூ.4 லட்சம் வசூலாகும் என நம்புகிறேன். இனி, ஏழைகள் அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசிய மில்லை’ என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும் எனவும் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x