போனி கபூர் காரில் இருந்து ரூ.39 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

போனி கபூர் காரில் இருந்து ரூ.39 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
Updated on
1 min read

தாவங்கரே: நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சொந்தமான காரில் இருந்து ரூ.39 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மே 10 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி, வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரையிலான சோதனையில் பெங்களூருவில் ரூ.1.47 கோடி மதிப்புள்ள 8.6 கிலோ தங்கம் மற்றும் 3.37 கோடி ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் நேற்றும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த சொகுசு காரை சோதனையிட்டதில், அதில் ஐந்து பெட்டிகளில் இருந்த 66 கிலோ வெள்ளிப் பொருட்கள் பிடிபட்டன. இதன் மதிப்பு ரூ.39 லட்சம். இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து அதனை கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் காரின் டிரைவர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்பு நடந்த போலீஸ் விசாரணையில், கார் போனி கபூர் நடத்திவரும் பே வியூ தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும், வெள்ளி பொருட்கள் போனி கபூர் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் டிரைவர் தரப்பில் சொல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in