

நொய்டா: நொய்டா காவல் உதவி ஆணையர் ரஜ்னீஷ் வர்மா கூறியதாவது: பிரதமருக்கும், உ.பி. முதல்வருக்கும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் காவல் துறை நடத்திய விசாரணையில் அந்த மின்னஞ்சல் லக்னோவின் சின்ஹாட் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டதை தொழில்நுட்ப குழு கண்டறிந்தது.
இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பிஹாரைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஊடக நிறுவன பிரதிநிதி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த சிறுவனின் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.