

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன்அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் இன்று (புதன்கிழமை) கூறும்போது, "ஜம்மு காஷ்மீரின் பிஜிபிஹரா பகுதியில் பதுங்கியிருந்த அதில் அகமத் என்ற நபரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அதில் அகமத் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி " என்றனர்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிவாத அமைப்பின் கமண்டோவாகயிருந்த புர்கான் வானி கொல்லப்பட்டது முதல் ஜம்மு காஷ்மீரில் அவ்வமைப்புக்கு எதிராக தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரவமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.