பிஎல்ஐ திட்டத்தில் ட்ரோன் துறைக்கு ரூ.30 கோடி நிதியுதவி

ட்ரோன் | கோப்புப்படம்
ட்ரோன் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், 2022-23 நிதியாண்டில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு அரசு ரூ.30 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா இலக்கை அடையவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் 2021-ல் பிஎல்ஐ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 2030-க்குள் இந்தியாவை ட்ரோன் மையமாக உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in