

தன்னுடன் இணைந்து வாழ்ந்து பிரிந்த தோழி ரேகா பிள்ளையின் குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டுகளை டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மறுத்துள்ளார். லியாண்டர் பயஸுடன், ரேகா பிள்ளை சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
கடந்த மாதம் நீதிமன்றம் சென்ற ரேகா பிள்ளை, லியாண்டர் பயஸ் மற்றும் அவரது தந்தை வேஸ் பயஸ் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஜீவனாம்சமாக பயஸிடமிருந்து தனக்கு மாதம் ரூ.4 லட்சம் பெற்றுத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ரேகா பிள்ளையின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள பயஸ், நீதிமன்றத்தில் புதன்கிழமை எதிர் மனு தாக்கல் செய்துள்ளார். எட்டு வயது மகளை யார் பாதுகாப்பது என்பதில் இருவருக்கு மிடையே போட்டி நிலவுகிறது. தன் மகளுக்கு நிரந்தர பாதுகாப்பாளராக தன்னை நியமிக்கக் கோரி பயஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.-பிடிஐ