Published : 30 Mar 2023 09:39 AM
Last Updated : 30 Mar 2023 09:39 AM

இன்று முதல் ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’ மகாராஷ்டிரா பாஜக அறிவிப்பு

மும்பை: எம்.பி. பதவி தகுதி இழப்புக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், சாவர்க்கர் விவகாரத்தில் சிவசேனாவுக்கும் (உத்தவ்), காங்கிரஸுக்கும் இடையேஏற்பட்ட மோதலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையி்ல, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’யைஇன்று முதல் தொடங்குவதாக பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளதாவது. சாவர்க்கரின் வரலாற்றையும், பங்களிப்பையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’ ஏப்ரல் 6 வரை நடத்தப்படவுள்ளது. இந்த யாத்திரை 288 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது இரண்டு முக்கிய நகரங்களில் நடைபெறும் இந்த யாத்திரையில் குறைந்தது 1 கோடி பேர் பங்கேற்பார்கள்.

இரண்டு முறை ‘‘காலா பானி’’ சிறை தண்டனைக்கு உள்ளான சாவர்க்கர், 500-க்கும் மேற்பட்ட கோயில்களில் பட்டியலினத் தவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், அவரது வரலாற்றை மறைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட் டுள்ளனர். அவ்வாறு நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சாவர்க்கரின் பங்களிப்புகளையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x