Published : 08 Sep 2017 08:45 AM
Last Updated : 08 Sep 2017 08:45 AM

பிடிஐ தலைவராக விவேக் கோயங்கா, துணைத் தலைவராக என்.ரவி தேர்வு

‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’ (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக விவேக் கோயங்கா (60) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ரவி (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ‘தி இந்து’ பத்திரிகையை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.

டெல்லியில் நேற்று பிடிஐ-யின் 69-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மகேந்திர மோகன் குப்தா (தைனிக் ஜாக்ரண்), கே.என்.சாந்த் குமார் (டெக்கான் ஹெரால்டு), வினீத் ஜெயின் (டைம்ஸ் ஆப் இண்டியா), அவீக் குமார் சர்க்கார் (ஆனந்த பஜார் பத்திரிகா), எம்.வி.வீரேந்திர குமார் (மாத்ருபூமி), ஆர். லட்சுமிபதி (தினமலர்), விஜய் குமார் சோப்ரா (தி ஹிந்த் சமாச்சார் லிமிடெட்), ராஜீவ் வர்மா (இந்துஸ்தான் டைம்ஸ்), ஹோர்முஸ்ஜி என்.காமா (பாம்பே சமாச்சார்) ஆகியோர் பிடிஐ இயக்குநர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை துறை சாராத இயக்குநர்களாக நீதிபதி ஆர்.சி.லஹோட்டி, பேராசிரியர் தீபக் நய்யார், ஷியாம் சரண், போச்கானவாலா ஆகியோர் உள்ளனர்.

பிடிஐ தலைவர் பதவிக் காலத்தை நிறைவு செய்த ரியாத் மேத்யூ கூறியபோது, கடந்த 2016-17-ம் ஆண்டில் பிடிஐ நிறுவனம் ரூ.172.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.6.4 கோடி அதிகமாகும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x