அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு

அமைதிக்கான நோபல் பரிசைப்பெற தகுதியானவர் மோடி: நோபல் கமிட்டி உறுப்பினர் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு கமிட்டியின் உறுப்பினரான அஸ்லே டோஜே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று ( வியாழக்கிழமை) தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி உள்ளார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி. நம்பகமான தலைவர்.

பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும் வளர்ந்து வருகிறது . பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று கூறினார்.

அஸ்லே டோஜே
அஸ்லே டோஜே

இந்த நிலையில் மோடி - நோபல் பரிசை பெற தகுதியானவர் என்று தான் கூறவில்லை என்றும் இது முற்றிலும் போலி செய்தி என்றும் நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தற்போது விளக்கமளித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in