எச்3என்2 வைரஸ் காய்ச்சல் - 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புனே: இன்ஃப்ளூயன்ஸா ஏ என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.

5 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் இவ்வகை வைரஸ்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்த வயது பிரிவில் உள்ள குழந்தைகள்தான் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடப்பாண்டு ஜனவரியிலிருந்து எடுக்கப்பட்ட 2,529 மாதிரிகளில் ஏறக்குறைய 17 சதவீதம் அதாவது 428 மாதிரிகள் எச்3என்2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் (என்ஐவி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்ஐவி விஞ்ஞானி வர்ஷா பொட்தர் கூறுகையில், “புனே மாவட்டத்தில் வைரஸ்காய்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை காணப்படுகிறது" என்றார்.

பாரதி மருத்துவமனையின் குழந்தைகள் ஐசியு வார்டு பொறுப்பாளர் பக்தி சாரங்கி கூறுகையில், ‘‘கடந்த 4-6 வாரங்களாக ஐசியு வார்டு நிரம்பி வழிகிறது. எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கே அதிகம் காணப்படுகிறது. இதில் பலருக்கு கல்லீரல் மற்றும் ரத்த அழுத்த மாறுபாடு பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அவர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் பொதுவான பாதிப்பாக காணப்படுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in