குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடகர் மீது பண மழை பொழிந்த மக்கள்

குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடகர் மீது பண மழை பொழிந்த மக்கள்
Updated on
1 min read

வல்சாத்: கடந்த சனிக்கிழமை குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வி தன் இசைக் குழுவுடன் பாடல்கள் பாடினார். அவர் பாட பாட அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிமயமாயினர். ரூபாய் நோட்டுகளை எடுத்து காத்வி மீது பொழிந்தனர்.

இதற்கென்று 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மக்கள் கொண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு நோட்டாக எடுத்து மேடையை நோக்கி மக்கள் வீசினர். இதனால், மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளால் நிரம்பியது. குஜராத்தில் இதுபோல் நடப்பது வழக்கம்தான். அதிலும், காத்வியின் நிகழ்ச்சியில் பணம் மழை கொட்டும். சென்ற ஆண்டு காத்வியின் இசை நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை பொதுமக்கள் பண மழையாக பொழிந்தனர்.

இது குறித்து நாட்டுப்புறப் பாடகர் காத்வி கூறுகையில், “இந்த நிகழ்ச்சி ஆதரவற்ற, நோயுற்ற பசுக்களைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தப் பணம் முழுவதும் அறைக்கட்டளைக்கே வழங்கப்படும்” என்று தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in