Published : 08 Sep 2017 08:48 am

Updated : 08 Sep 2017 08:48 am

 

Published : 08 Sep 2017 08:48 AM
Last Updated : 08 Sep 2017 08:48 AM

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் உயிர்த் தப்பினர்

7

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நேற்று ஒரே நாளில் 3 ரயில்கள் வெவ்வேறு இடங்களில் தடம் புரண்டன.

ஹவுராவில் இருந்து ஜபல்பூருக்கு சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. காலை 6.25 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் ஓப்ரா அணை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் அப்போது 40 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு பின்னர், ரயில் புறப்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்று ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் சக்சேனா தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியில் ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

உ.பி.யில் கடந்த ஒரு மாதத்தில் இது 3-வது ரயில் விபத்து. ஆகஸ்ட் 19-ம் தேதி உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 22 பேர் இறந்தனர். கடந்த 23-ம் தேதி கைபியாத் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 100 பேர் காயமடைந்தனர்.

டெல்லி, மகாராஷ்டிராவில்..

டெல்லியிலும் நேற்று பகல் 11.45 மணியளவில், ராஞ்சியில் இருந்து டெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினும் பவர் கோச்சும் மின்டோ பாலம் அருகே தடம் புரண்டன. இதேபோல மகாராஷ்டிராவில் கண்டலா என்ற இடம் அருகே சரக்கு ரயில் ஒன்றின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்துகளில் யாருக்கும் காயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author