Last Updated : 17 Sep, 2017 06:39 PM

 

Published : 17 Sep 2017 06:39 PM
Last Updated : 17 Sep 2017 06:39 PM

கோரக்பூர் குழந்தைகள் மரணம்: தலைமறைவான ஆக்ஸிஜன் சப்ளையர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கிவந்த புஷ்பா ஆக்ஸிஜன் விற்பனை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 60க்கும் மேற்பட்ட குழந்தைகள், பச்சிளங் குழந்தைகள் இறந்தனர். இம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கிவந்த கடைக்கு சரியாக பணத்தை செலுத்தாதால் ஆக்ஸிஜன் வழங்குவதில் இடையூறுகள் ஏற்பட்டதாலேயே குழந்தைகள் மரணம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் இறப்புக்கு வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டை மாநில அரசு கடுமையாக மறுத்தது. இன்று கைது செய்யப்பட்டவருடன் இதுவரை எஃப் ஐஆர் பதிவுசெய்யப்பட்டு 9 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோரக்பூர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அனிருத் சிதார்த்தா பங்கஜ் தெரிவித்ததாவது:

புஷ்பா விற்பனைக் கடை உரிமையாளர் (the proprietor of Pushpa Sales) மணீஷ் பண்டாரி தியோரியா கோரக்பூரிலுள்ள பைபாஸ் சாலையில் இன்று காலை 8 மணியளவில் கோரக்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பண்டாரி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அதன் பின்னர் அவர் விசாரணை செய்யப்படுவார். பின்னர் அவர் ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்’’ என்றார்.

மணீஷ் பண்டாரி நீண்டநாட்கள் தலைமறைவாக இருந்துவந்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 15 ம் தேதி, ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம், பண்டாரி தலைமறைவாகியுள்ளதாக அறிவித்தது, அவரது சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவக் கல்லூரியின் முன்னாள் ஆக்ஸிஜன் சப்ளையர் ‘புஷ்பா விற்பனைக் கடை’ ஆகும்.

தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஆகஸ்ட் 23 அன்று இவ்வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. குழுவின் அறிக்கையில் மருத்துவமனையின் துயரத்தை கருத்தில்கொண்டு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அனஸ்திஸியா பிரிவுத்தலைவர் டாக்டர் சதீஷ், ஏஈஎஸ் வார்டு பிரிவின் 100 படுக்கைகளுக்கான பொறுப்பு டாக்டர் கஃபீல் மற்றும் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கும் புஷ்பா விற்பனைக் கடை ஆகியோருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க அந்த அறிக்கை பரிந்துரை செய்தது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரவுக்கு இணங்க தலைமைச் செயலாளரின் கீழ் இக்குழு குழந்தைகளின் மரணத்திற்கு மறுநாள் ஆகஸ்ட் 12 அன்று அமைத்து செயல்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x