சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற குழு பஹ்ரைன் பயணம்

சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாடாளுமன்ற குழு பஹ்ரைன் பயணம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 146-வது கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் பஹ்ரைனில் உள்ள மனாமாவில் இன்று தொடங்கி வரும் புதன்கிழமை வரை நடைபெற உள்ளன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 110 நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று மனாமா சென்றடைந்தனர். இக்குழுவில் மக்களவை எம்.பி.க்கள் பத்ருஹரி மஹ்தாப், பூனம்பென் மாடம், விஷ்ணு தயாள் ராம், ஹீனா விஜய்குமார் காவிட், ரக் ஷிதா நிகில் காட்சே, தியா குமாரி, அபராஜிதா சாரங்கி, மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா, சஸ்மித் பத்ரா, ராதா மோகன் தாஸ் அகர்வால் மற்றும் மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் இடம்பெற்றுள்ளனர்.

ஐபியுவின் ஆசிய-பசிபிக் குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஐபியு கூட்டத்தில் நாளை நடைபெறும் பொது விவாதத்தில் ஓம் பிர்லா பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in