இந்தியா
திஹார் சிறையில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
புதுடெல்லி: டெல்லியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் நீதிமன்ற அனுமதி பெற்றனர். இதையடுத்து சிறை எண் 1-ல் உள்ள சிசோடியாவிடம் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். டெல்லி கலால் துறை அமைச்சராக அவர் பின்பற்றிய கொள்கை முடிவுகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத் துறையும் அவரை கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
