தெலங்கானாவில் பெண் ஊழியர்களுக்கு நாளை அரசு விடுமுறை

தெலங்கானாவில் பெண் ஊழியர்களுக்கு நாளை அரசு விடுமுறை

Published on

ஹைதராபாத்: நாளை 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தெலங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in