இந்தியா
தீவிரவாதி முஸ்தாக் லத்ரம் வீடு முடக்கம்
ஸ்ரீநகர்: கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகாருக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. பிணைக் கைதிகளாக இருந்த இந்தியப் பயணிகளை மீட்பதற்காக இந்திய சிறைகளில் இருந்த 3 முக்கிய தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் முஸ்தாக் லத்ரம். அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், ஸ்ரீநகரின் நவ்ஹாட்டா பகுதியில் 540 சதுரஅடி நிலத்தில் உள்ள லத்ரமுக்கு சொந்தமான வீட்டை உபா சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நேற்று முடக்கினர்.
