

ரயில்வே பட்ஜெட் மிக மோசமானதாக உள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு எந்த புதிய அறிவிப்பும் வரவில்லை என கூச்சலிட்டனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் வெளியே, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "ரூ.164,374 கோடி மதிப்பிலான ரயில்வே பட்ஜெட்டில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது" என்றார்.