காஷ்மீர் பண்டிட் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்

காஷ்மீர் பண்டிட் இறுதிச்சடங்கில் குவிந்த பொதுமக்கள்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தசஞ்சய் சர்மா என்பவர் தீவிரவாதிகளால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர்பக்கத்தில், “காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே சிறுபான்மையினரை பாஜக பயன்படுத்துகிறது” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in