24 காரட் தங்க தோசை - ஹைதராபாத்தில் விற்பனை

ஹைதராபாத்தில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் படும் தங்க தோசை.
ஹைதராபாத்தில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் படும் தங்க தோசை.
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 கேரட் தங்க தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹைதராபாத் தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் தோசாஸ்’ என்ற உணவகத்தில் 24 காரட் தங்க தோசை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசையில் 24 கேரட் தங்க நெய் காகி தத்தை வைத்து தருவதால் இதன்விலை ரூ. 1000 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

ஆயினும் இதனை சாப்பிட குடும்பம், குடும்பமாக வருகின்றனர். அதிலும் வார இறுதி நாட்களில் இந்த உணவகத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஹைதராபாத்தில் சாதாரணமாக ஒரு தோசை ரூ.30 முதல்150 வரை ஓட்டல்களில் விற்பனைசெய்யப்படுகிறது. ஆனால் இந்த24 காரட் தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், ஹைதராபாத் நகரிலேயே விலை உயர்ந்த சிற்றுண்டிஎன்ற பெயரை இது பெற்றுள்ளது.

இந்த விலை உயர்ந்த தோசையுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பாதம் பருப்பு, சுத்தமான நெய், வகை வகையான சட்னிகள், காரப்பொடி, தேங்காய் காரப்பொடி என 9 வகையான சைட்-டிஷ் பரிமாறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in