

திமாபூர்: வடகிழக்கு மாநிலமான நாகா லாந்தில் திங்கட்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் பாஜக 20 இடங்களிலும் அதன் அணியில் உள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் திமாபூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பாடுபடுகிறது, இதனால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இம்மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் நாகா லாந்தில் அரசியல் ஸ்திரமின்மை இருந்தது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களையும் ஏடிஎம் போன்று காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால் இந்த 8 மாநிலங்களையும் அஷ்டலட்சுமியாக பாஜக கருதுகிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊழலை பாஜக ஒழித்துள்ளது. இதன் விளைவாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.