

ஸ்ரீராமானுஜரின் 1000-வது ஆண்டு விழாவையொட்டி, ‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ என்ற சிறப்பு மலரை ‘தமிழ் திசை’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த நூல், ‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் நாளிதழைப் படைக்கும் கேஎஸ்எல் மீடியா லிமிடெட் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் முதல் படைப் பாகும்.
இந்த நூலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் சுவாமிகள் தமது ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளார். அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்தப் புத்தகத்தில் ஸ்ரீராமானுஜரின் கொள்கைகள், கருத்துகள் மிக எளிமையான முறையில் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இதை பக்தர்கள் கண்டிப்பாகப் படித்து ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை அறிந்துகொண்டு அவரது அருளைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராமானுஜரின் அருள் பெற்று, சுபிட்சமாக வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். ஆச்சாரியாரின் திருவடியே சரணம்.
இவ்வாறு தேவஸ்தான பெரிய ஜீயர் சுவாமிகள் கூறினார்.
‘ஸ்ரீராமானுஜர் ஆயிரம் காணும் அற்புதர்’ என்ற இந்த சிறப்பு மலர் ரூ.300-க்கு கடை களில் கிடைக்கிறது. தபாலில் பெற விரும்புவோர் KSL MEDIA LIMITED என்ற பெயரில் ரூ.360-க்கு டிடி அல்லது காசோலை அனுப்பி மலரை பெற்றுக்கொள்ளலாம். அனுப்பவேண்டிய முகவரி: ‘தி இந்து’தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை- 600002.
மேலும் விவரங்களை 7401296562 என்ற செல்போன் எண் அல்லது 044-30899000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். இமெயில் முகவரி: books@thehindutamil.co.in