

காஷ்மீரில் இளைஞர் மாயமான விவகாரத்தில் போலீஸாரை குற்றம் சாட்டிய மக்கள், பின்னர் தங்கள் தவறை உணர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியைச் சேர்ந்த ஜூபைர் அகமது என்ற இளைஞர் திடீரென மாயமானார். அவரை போலீஸார் பிடித்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக சோபியான் பகுதியில் கடந்த 4 நாட் களாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாயமான இளைஞர் தீவிரவாத குழுவில் இணைந்திருப்பதாக உள்ளூர் மக்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தங்களின் தவறை உணர்ந்த பொதுமக்கள் முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட்டனர். நேற்றுமுதல் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இதுகுறித்து போலீஸார் கூறிய தால், தீவிரவாதிகளும் பிரிவினை வாதிகளும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பு வதால் காஷ்மீரில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இதனிடையே நகரில் நேற்று பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து மாணவர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காய மடைந்தார். எனினும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த பொறுமை காத்தனர். இதனால் மாணவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.