சிபிஎஸ்இ தேர்வில் தனியாரைக் காட்டிலும் 9% அதிக தேர்ச்சி: டெல்லி அரசுப்பள்ளிகள் சாதனை

சிபிஎஸ்இ தேர்வில் தனியாரைக் காட்டிலும் 9% அதிக தேர்ச்சி: டெல்லி அரசுப்பள்ளிகள் சாதனை
Updated on
1 min read

டெல்லியைச் சேர்ந்த அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ தேர்வில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் 9% அதிகம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் தனியார் பள்ளிகள் 79.27 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 9% அதிகமாக 88.27 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

இதனால் டெல்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தேசிய அளவில் சிபிஎஸ்இ சராசரி தேர்ச்சியான 82.06% ஐ விட, 6 சதவீதம் அதிகமாகி உள்ளது.

'ஆம் ஆத்மி வெற்றி'

இதை ஆம் ஆத்மியின் கல்வி முயற்சிக்கான வெற்றி என்று கூறியுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கல்வி அமைச்சர் மனிஷ் சிதோடியாவைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட கேஜ்ரிவால், ''மனிஷ், ஆம் ஆத்மியின் கல்வி முன்னெடுப்புக்காகக் கடினமாக உழைத்த லட்சக்கணக்கான தன்னார்வலர்களின் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்'' என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சிசோடியா, சிறப்பாக செயல்பட்ட அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட அரசுப்பள்ளிகள் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in