

மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த கத்சிரோலி மாவட்டத்தில் நக்சல் ஒழிப்பு படை யினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பணி முடிந்து நக்சல் ஒழிப்பு படையினர் திரும்பிக் கொண்டிருந்தபோது, வாகன பதிவெண் (நம்பர் பிளேட்) இல்லா மல் எதிரே வந்த காரை கவனித்தனர். அதை வழிமறித்து அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன் னுக்குப் பின் முரணாக பேசியுள்ள னர். இதனால் சந்தேகமடைந்த படையினர் உடனடியாக அருகில் இருந்த அஹேரி போலீஸ் நிலை யத்துக்கு தகவல் அளித்து கூடுதல் படையினரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே அந்த காரில் சோதனை நடத்தியபோது ரூ.75 லட்சம் ரொக்கமும், நக்சல் தொடர் பான புத்தகங்களும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து அந்த காரில் பயணித்த பஹாடியா துள்சிராம் தம்பலா (35), ரவி மால்யா (45) மற்றும் நாகராஜ் சம்யாவை (37) போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணை யில் அவர்கள் பீடி சுற்ற பயன்படும் தேண்டூ இலை ஒப்பந்ததாரர்கள் என்பதும் நக்சல்களுக்கு கொடுப் பதற்காக அந்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். இதுதவிர பொட்லாசேரு கிராமத் திலும் ரூ.1.01 கோடி பணத்தைப் பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். அதன் அடிப்படை யில் போலீஸார் உடனடியாக விரைந்து சென்று அந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கத்சிரோலி போலீஸார் கூறும்போது, ‘‘குற்ற வாளிகள் 3 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கையின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்களை வரும் 28-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.