

பெங்களூரில் 6 பேர் கொண்ட கும்பலால் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத் தியுள்ளது.
குற்றவாளிகளை தண்டிக்க கோரி கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலும் கல்லூரி மாணவர் கள் போராட்டத்தில் குதித்துள் ளனர்.
பெங்களூர் பிரேசர் டவுன் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூர் வந்த இவர், கடந்த 11-ம் தேதி இரவு தனது நண்பர் களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அப்பெண் தனது அடுக்குமாடி குடியிருப்பு அருகே தனது நண்பர் ரஞ்சித் உடன் பேசிக்கொண் டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் இருவரையும் காரில் கடத்தியுள்ளது . தப்பிக்க முயன்ற இவர்களை தாக்கியும் உள்ளனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் காக்ஸ்டவுன் ரயில் தண்டவாளம் அருகே காரை நிறுத்திய அக்கும் பல், ரஞ்சித்தை வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளது. பிறகு கத்தி முனையில் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள் ளனர்.
மயங்கிய நிலையில் இருந்த மாணவி மற்றும் அவரது நண்பரை அதிகாலை 5 மணியளவில் பிரேசர் டவுன் பகுதியில் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப் பட்ட அந்த மாணவி, இதனை தனது பெற்றோர்களிடம் கூறவில்லை. அவரை தேற்றிய நண்பர்கள் கடந்த சனிக்கிழமை மாலை புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று கூறப் படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது நண்பர்களும் மறுநாளும் காவல் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தையும் காரின் நம்பரையும் கூறி வலியுறுத்தி யுள்ளனர். இதன் பிறகே கடத்தல், பாலியல் தொந்தரவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் 6 பேர் கொண்ட கும்பல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒருவர் கைது
இதற்கிடையே இந்த சம்பவம் ஊடகங்களில் கசிந்தது. இதனால் போலீஸாருக்கு அழுத்தம் ஏற்பட்டதால் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாணவி கடத்தலில் தொடர்புடைய கார் சிவாஜி நகரில் நிற்பதாக அறிந்த போலீஸார் அங்கு சென்று காரை பறிமுதல் செய்தனர். ஹைதர் நசீர் (26) என்பவரை கைது செய்த அவர்கள் எஞ்சிய 5 பேரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சட்டப்பேரவையில் எதிரொலி
இந்த சம்பவம் புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அனைத்து உறுப்பி னர்களும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியு றுத்தினர்.
சீனிவாசப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் பேசும்போது, “கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது.பாதிக்கப் பட்ட பெண்ணின் புகாரை ஏற்க மறுத்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ்துறை ஆள் தேர்வில் பணமும் சாதியுமே முக்கியப் பங்கு வகிக்கிறது. அவ்வாறு தேர்வான போலீஸாரே இவ்வாறு செயல்படு கின்றனர். இதில் தொடர்புடைய போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதனை தடுக்க நினைக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார்.
கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில் மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றம் செய்தவர்களை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர்.