

உக்ரைனில் மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் 298 பேர் பலியாகினர். இந்நிலையில் இச்சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், "மலேசிய விமானம் எம்.எச்.17-ல் இருந்த பயணிகள் அனைவரும் பலியாகியுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய துன்பத்தில் இந்திய தேசம் பங்கேற்கிறது" என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எல்லையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் மலேசிய விமானம் எம்.எச்.17 கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் 15 பேர் உள்பட 298 பேரும் பலியாகினர்.