ஜாமீன் எளிதாக கிடைக்க சட்ட ஆணையம் புதிய பரிந்துரை

ஜாமீன் எளிதாக கிடைக்க சட்ட ஆணையம் புதிய பரிந்துரை
Updated on
1 min read

ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட விசாரணை கைதிகள், மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவித்திருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஜாமீன் எளிதாக கிடைக்கும் வகையில் இந்திய கிரிமினல் தண்டனை சட்டம் 436 ஏ பிரிவில் மாற்றம் கொண்டு வர சட்ட குழு இந்த பரிந்துரையை முன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இக்குழுவில் இடம்பெற்ற மூத்த உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஜாமீனுக்காக நீதிமன்றம் பிறப் பிக்கும் உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாத விசாரணை கைதிகள், இனி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.

தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் தகவலின்படி நாடு முழுவதும் உள்ள சிறை கைதி களில் மூன்றில், இரு மடங்கு பேர் விசாரணை கைதிகள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு எளிதாக ஜாமீன் கிடைப்பதற்கான பரிந்துரை களை வழங்கும்படி சட்ட ஆணையத்துக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்ப தாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in