மத்தியபிரதேசத்தில் லாரி கவிழ்ந்து 11 தொழிலாளர் பலி

மத்தியபிரதேசத்தில் லாரி கவிழ்ந்து 11 தொழிலாளர் பலி
Updated on
1 min read

மத்தியபிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 தொழி லாளர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ராஜேந்திர பாக்ரி கூறியதாவது:

ஜபல்பூரை அடுத்த சார்கவன் பகுதிக்கு வனத்துறைக்கு சொந்தமான லாரியில் 17 தொழிலாளர்கள் நேற்று அதி காலையில் சென்றதாக தெரிகிறது. அப்போது ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந் தனர். காயம் அடைந்த 6 பேர் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர். விபத்து நடந்த இடத் துக்கு மூத்த காவல்துறை அதி காரிகளும் வனத்துறை அதிகாரி களும் விரைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in