திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம் 31-ம் தேதி தொடங்குகிறது

திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம் 31-ம் தேதி தொடங்குகிறது
Updated on
1 min read

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 31-ம் தேதி தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருப்பதி நகரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருத்தலமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் உற்சவ மூர்த்தி களில் திருமாட வீதி உலா நடைபெறும். இதில் முக்கியமாக ஜூன் 4-ம் தேதி இரவு கருட வாகனம், 7-ம் தேதி காலை தேர்த்திருவிழா மற்றும் நிறைவு நாளான 8-ம் தேதி காலை சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதற்கான விளம்பர சுவரொட்டிகளை தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in