

டெல்லி தலைமைச் செயலகம் உட்பட 6 இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. அரசு மருத்துவ மனைகளில் பாதுகாப்பு பணியை தனியார் ஏஜென்சிகளுக்கு ஒதுக்கியதில் ரூ.10 கோடி ஊழல் நடந்திருப்பதாக வெளியான புகாரின் பேரில், சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலால் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப் பட்டவர் தருண் சீம். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவரை செய லாளர் மட்டத்தில் நியமிக்க அப்போதைய துணை ஆளுநர் நஜீப் ஜங் எதிர்ப்புத் தெரிவித்த தோடு, அந்த நியமனத்தையும் ரத்து செய்தார். ஐ.ஏ.எஸ். அதி காரிகளைத் தான் துறைச் செய லாளராக நியமிக்க வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதன்பின், சுகாதார இயக்குந ராக தருண் சீமை நியமித்தது கேஜ்ரிவால் அரசு. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள அவசரப் பிரிவுகளில் பாதுகாப்புப் பணிக்காக 3 தனியார் ஏஜென்சிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.10 கோடி முறை கேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, சிபிஐ அதிகாரி கள், தலைமைச் செயலகத்தில் உள்ள தருண் சீம் அலுவலகம், வீடு உட்பட 6 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்களைக் கைப் பற்றியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தருண் சீம், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் 3 தனியார் பாது காப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, “அரசு மருத்துவமனைகளில் தனியார் ஏஜென்சிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ரூ.10 கோடி மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது” என்றனர்.