

ராஜஸ்தானில் சிலர் ராணுவத்துக்கு போலியாக ஆள் சேர்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படையினரும் ராணுவ உளவுப் பிரிவினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 4 பேரை ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது, ஜெய்ப்பூரில் உள்ள சிறப்பு செயல்பாட்டுக் குழு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.