Published : 15 Jul 2014 12:19 PM
Last Updated : 15 Jul 2014 12:19 PM

சென்னையில் ஒரே நாளில் 5 பெண்களிடம் 26 பவுன் வழிப்பறி: பைக்கில் கைவரிசை; டெல்லி கும்பலா?

சென்னையில் திங்கள்கிழமை ஒரே நாளில் 5 பெண்களிடம் 26 பவுன் செயின்கள் வழிப்பறி செய்யப்பட்டன. ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்தான் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டி யுள்ளனர்.

சென்னை கொளத்தூர் ஜமுனா நகரை சேர்ந்தவர் சிவராமகிருஷ் ணன். இவரது மனைவி சத்யபிரியா (35). மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக திங்கள்கிழமை காலையில் இருவரும் பைக்கில் சென்றனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செல்லும்போது, இன் னொரு பைக் அவர்களை நெருங்கி வந்தது. ஹெல்மெட் அணிந் திருந்த 2 பேர் அதில் இருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், சத்யபிரியாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். செயினை இழுத்த வேகத்தில் நிலைகுலைந்த சத்ய பிரியா, பைக்கில் இருந்து விழுந் தார். அவரது தலையில் அடி பட்டு ரத்தம் வந்தது. செயினை கொள்ளையர்கள் வலுவாக இழுத் ததால் கழுத்திலும் சிராய்ப்புக் காயம் இருந்தது. எழும்பூர் போலீ ஸார் வந்து விசாரணை நடத்தினர். மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் சத்யபிரியா சிகிச்சை பெற்றார்.

திருமங்கலத்தில் 13 பவுன்

விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. திருமங்கலத்தில் உள்ள உறவினரை பார்க்க 18-வது குறுக்குத் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் அவரது 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின் பேரில், திருமங்கலம் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.

திருமங்கலம் பி.என்.டி. குடியிருப்பில் வசிப்பவர் செல்வி. தனியார் நிறுவன ஊழியர். வீட்டில் இருந்து திருமங்கலம் பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்தவர்கள் அவரது 7 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர்.

வாக்கிங் சென்றபோது..

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி மகேஸ் வரி தனியார் பள்ளி ஆசிரியை. புரசைவாக்கம் அழகப்பா சாலை யில் இருவரும் திங்கள்கிழமை காலை வாக்கிங் சென்றனர். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் மகேஸ் வரியின் 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அம்பத்தூரில் 6 பவுன்

அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் பேச்சாத்தாள். இவர் வீட்டருகே நடந்து சென்ற போது, பைக்கில் வந்த 2 பேர் அவரது 6 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 5 பெண்கள் மொத்தம் 26 பவுன் நகைகளை பறிகொடுத்துள்ளனர். இந்த 5 சம்பவங்களும் திங்கள்கிழமை காலையில் நடந்துள்ளது. ஹெல் மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர்தான் அனைத்து சம்பவங் களிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரே ஆசாமிகளா என்பது தெரிய வில்லை.

இது மட்டுமின்றி அபிராமபுரம், நுங்கம்பாக்கத்தில் 2 பெண்களின் செயின்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பறிக்கப்பட்டுள்ளன.

அங்கும் இங்குமாக சென்னை முழு வதும் கடந்த 3 நாட்களாகத் தொடரும் செயின் பறிப்பு சம்பவங் களை பார்த்தால் ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு சென்னைக்குள் நுழைந்து வழிப்பறிக் கொள்ளை யில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் டெல்லி கும்பல்?

ஒரு ஆண்டுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் விமானத்தில் சென்னைக்கு வந்து 3 மாதங்கள் சென்னையில் தங்கி நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டார். அதேபோன்ற கும்பல் சென்னைக்குள் மீண்டும் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீஸார் உடனே இதில் கவனம் செலுத்தி பாதுகாப்பு, கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x