Published : 29 May 2017 10:56 AM
Last Updated : 29 May 2017 10:56 AM

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

கேரள முன்னாள் முதல்வரும், நிர்வாக சீர்திருத்த ஆணைக்குழுத் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய அச்சுதானந்தனின் தனிப்பட்ட மருத்துவரும், இதய நிபுணருமான பரத் சந்திரன், ''அச்சுதானந்தன் கடந்த இரண்டு நாட்களாக தீவிர ரத்த அழுத்த மாறுபாட்டால் அவதிப்பட்டார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உடல்நிலை மோசமடைந்தது.

அதைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஏற்கெனவே இருந்த மூச்சுக்குழாய் பிரச்சினையால் அவர் சுவாசிக்கச் சிரமப்பட்டது தெரியவந்தது. இப்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவார்.

உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர்

அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே கேரள முதல்வர் பினராயி விஜயன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x