Published : 23 Jul 2014 09:51 AM
Last Updated : 23 Jul 2014 09:51 AM

4 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித், நீதிபதி பானுமதி உட்பட உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகள் நான்கு பேர் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட கோபால் சுப்பிரமணியம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் உதய் உமேஷ் லலித் பரிந்துரைக்கப்பட்டார். அவருடன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல் சந்திர பந்த், குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சாப்ரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இவர்களது பரிந்துரைக்கு சட்டத் துறை ஒப்புதல் அளித்து, பிரதமரின் பார்வைக்கு அனுப்பியது. நான்கு பேரின் நியமனத்துக்கு பிரதமர் அலு வலகமும் ஒப்புதல் அளித்து, குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததும் இவர்கள் நான்கு பேரும் நீதிபதிகளாக பொறுப்பேற்பார்கள். நீதிபதி பானுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் நான்கு பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் நீதிபதிகளின் எண்ணிக்கை 30 ஆக உயரும். மொத்தமுள்ள 31 நீதிபதி பணியிடங்களில் ஒரு இடம் காலியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x