Last Updated : 09 May, 2017 09:25 AM

 

Published : 09 May 2017 09:25 AM
Last Updated : 09 May 2017 09:25 AM

கர்நாடகாவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 2 போலீஸாரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது: ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்

கர்நாடகாவில் காட்டு யானை தாக்கியதில் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 2 போலீஸார் பரிதாபமாக பலியாகினர். இதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் ககலிபுரா அருகே தரலு கிராமத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. ஆரோஹள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள இங்கு, மத்திய ஆயுதப் படை போலீஸ் உதவி ஆய்வாள ராக வேலூரைச் சேர்ந்த தட்சிணா மூர்த்தி ( 52) மற்றும் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த புட்டப்பா (33) ஆகியோர் பணியாற்றி வந்தன‌ர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பயிற்சி மையத்தின் முன்பாக காவல் பணியில் தட்சிணாமூர்த்தியும், புட்டப்பாவும் ஈடுபட்டிருந்தன‌ர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை திடீரென இருவரையும் துரத்தியது. அதிர்ச்சி அடைந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிய போதும், அவர்களை அந்த யானை சுற்றி வளைத்து தாக்கியது.

இருவரையும் தூக்கி வீசியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் அலறல் சப்தத்தைக் கேட்டு ஓடிவந்த போலீஸார், அந்த யானையை அங்கிருந்து விரட்டினர். பின்னர் இருவரின் உடலையும் மீட்டு, ராமநகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற் கெனவே அவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ச‌ம்பவ இடத் துக்கு வந்த மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி. திக்விஜய் சிங், ராமநகர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தம்மைய்யா ஆகியோர் விசாரித்தன‌ர். இதில், போலீஸாரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை, பெங்களூரு புறநகரில் உள்ள பன்னரகட்டா வனப்பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, இறந்த 2 போலீஸாரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மத்திய ஆயுதப்படை பயிற்சி மையம் சார்பில் 2 போலீஸாரின் உடலுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மத்திய ஆயுதப்படை போலீஸார் கூறும்போது,

“இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாக இருக்கிறது. உயிரிழந்த 2 பேரையும் காப்பாற்ற முயற்சித்தோம். எங்களிடம் துப் பாக்கிகள் இருந்தும் காப்பாற்ற‌ முடியாமல் போய்விட்டது. ஆபத் தான நேரத்தில் யானை போன்ற வனவிலங்குகளை சுடுவதற்கு எங் களுக்கு அனுமதிக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான நேரத்தில் யானை போன்ற வனவிலங்குகளை சுடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஆயுதப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x