

ஆந்திரா (10), தெலங்கானா (4), ஒடிசா (10) மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஏஜெண்ட் மூலம் வேலை தேடி துபாய் சென்றனர். இவர்கள் அனைவரும் ரியாத் நகரில் ஒரு நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். ஆனால், விசா இல்லை என தெரியவந்ததால் இவர்களை வேலையைவிட்டு நீக்கி உள்ளனர்.
இதன் காரணமாக இவர்கள் அனைவரும் தங்க இடம், உண்ண உணவின்றி, சாலையில் படுத்து உறங்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இவர்கள் தெலங்கானா மாநில முதல்வரின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவுக்கு 4 பக்க கடிதம் அனுப்பி உள்ளனர்.