பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியாருக்கு ஆயுள் முடியும் வரை சிறை

பாலியல் பலாத்கார வழக்கில் கேரள பாதிரியாருக்கு ஆயுள் முடியும் வரை சிறை

Published on

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் கேரளாவைச் சேர்ந்த பாதிரியாருக்கு இன்னொரு பலாத்கார வழக்கில் அவர் ஆயுள் முடியும் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த இன்னொரு பலாத்கார வழக்கில் திருச்சூர் கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தப் பாதிரியார் பெயர் சனில் கே.ஜேம்ஸ். இவர் முதல் பலாத்கார சம்பவம் வெளி உலகிற்கு வந்த போது பீச்சி சால்வேஷன் ஆர்மி சர்ச் இவரை பதவியிலிருந்து நீக்கியது.

இந்தப் புதிய பலாத்கார வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பயஸ் மேத்யூ இன்று வாதிடும் போது மீண்டும் ஒரு 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவத்தை கோர்ட் முன் வைத்தார்.

“இந்த 13 வயது சிறுமியை முதலில் சர்ச் வளாகத்திலும் தனது வீட்டிலும் பலாத்காரம் செய்துள்ளார் ஜேம்ஸ்” என்று திருச்சூர் கோர்ட்டில் கூறினார்.

இதனையடுத்து ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குற்றவளி ஜேம்ஸுக்கு ஆயுள் முழுதும் சிறையில் இருக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in