டெல்லியில் 3 வயது குழந்தை பலாத்காரம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் 3 வயது குழந்தை பலாத்காரம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

டெல்லியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அக்குழந்தைக்கு குறைந்தது 2 அறுவை சிகிச்சைகளாவது மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், "மத்திய டெல்லியின் ஆனந்த பிரபாத் பகுதியிலிருந்து புதன்கிழமை குழந்தை கடத்தப்பட்டிருக்கிறார். அப்பகுதியில் உள்ள நேரு நகரில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (22) கூலித்தொழிலாளி கடத்திச் சென்றுள்ளார். தனது வீட்டுக்கு குழந்தையை கடத்திச் சென்ற விஜய் குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குழந்தையை தேடிய பெற்றோர் விஜய்யின் வீட்டில் குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பெற்றோரைப் பார்த்ததும் விஜய் அங்கிருந்து தப்பியுள்ளார். குழந்தை கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிய விஜய் பின்னர் கைது செய்யப்பட்டார். போஸ்கோ சட்டத்தின் கீழ் விஜய் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in