

கால்நடை சந்தைகளில் இறைச்சிக் காக பசு, காளை, ஒட்டகங்களை விற்க, வாங்க தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளி யிட்டது. மேலும் விவசாயிகள் மட்டும்தான் சந்தைகளில் கால் நடைகளை விற்க முடியும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு மாநில அரசுகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநில அரசுகள் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளன.
இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற குழு பிறப்பித்த சில பரிந்துரைகளின் அடிப்படை யிலேயே இந்த தடை விதிக்கப் பட்டது. சித்ரவதை மற்றும் கடத்தல்களில் இருந்து விலங்கு களை காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே சமயம் சில மாநில அரசுகளும், வணிக அமைப்புகளும் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்றார்.