கேரள சம்பவத்தில் மதச்சார்பற்றவர்கள் மவுனம் காப்பது ஏன்?- ஆதித்யநாத் கேள்வி

கேரள சம்பவத்தில் மதச்சார்பற்றவர்கள் மவுனம் காப்பது ஏன்?- ஆதித்யநாத் கேள்வி
Updated on
1 min read

கேரளாவின் மாட்டு இறைச்சித் திருவிழா மீது மதச்சார்பற்ற தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மகுல்டி அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து மக்கள் கூடியிருந்த இடத்தில் பலர் பார்க்கும்வகையில் எருது ஒன்றை பலியிட்டார். பின்னர் அதன் தலையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை எதிர்க்கும் வகையில் இளைஞர் காங்கிரஸார் இந்தத் திருவிழாவை நடத்தினர்.

இந்நிலையில், இச்சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "மதச்சார்பற்ற கொள்கை வேண்டும். மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு குரல் கொடுத்துவருகின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் கேரள சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன்? மதச்சார்பற்ற தலைவர்கள் மவுனமாக இருப்பது ஏன்?

டெல்லி பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் உணர்ச்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் இப்போது மவுனமாக இருப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றிரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள சம்பவத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரளாவில் நடந்தது முன்யோசனையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல். இத்தகைய செயலை நானும், கட்சியும் ஒருபோதும் ஏற்பதற்கில்லை. இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in