

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்பேரில், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதியில் இருந்து தினம்தோறும் விசாரணை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை நடக்கிறது.
வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.கே. யாதவ், வழக்கில் 6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சிவசேனா கட்சியின் முன்னாள் எம்பி சதீஷ் பிரதானுக்கு ஜாமீன் வழங்கினார். முன்னதாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி, சம்பத் ராய், பைகுந்த் லால் சர்மா, மகந்த் நிருத்ய கோபால் தாஸ், தர்ம்தாஸ் மகராஜ் ஆகியோருக்கு நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பிரதான குற்றவாளிகளாச் சேர்க்கப்பட்டுள்ளனர்.