கேரளாவில் டிவி நடிகையுடன் காரில் பயணித்த டிஐஜி

கேரளாவில் டிவி நடிகையுடன் காரில் பயணித்த டிஐஜி
Updated on
1 min read

கேரளாவில் டிஐஜி ஒருவர் தொலைக்காட்சி நடிகையை அரசு வாகனத்தில் ஏற்றிச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள சிறைத் துறையின் தெற்கு மண்டல டிஐஜியாக இருப்பவர் பி.பிரதீப். இவர் பத்தனம்திட்டா பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சிறை தின விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகையை அரசு காரில் ஏற்றிச் சென்றதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியவந்ததை அடுத்து, சிறைத்துறையின் இயக்குநரான ஆர்.ஸ்ரீலேகாவிடம் விசாரிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீலேகா கூறுகை யில், “முதல்வருக்கு பெயர் தெரிவிக்காத ஒருவர் அனுப்பிய புகாரின்பேரில் அவரது அலுவலகம் விசாரணை நடத்த எனக்கு உத்தர விட்டுள்ளது. இதன் அடிப்படை யில் விசாரணைக்கு உத்தரவிட் டுள்ளேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in