காக்கிநாடாவில் எண்ணெய் டேங்கரில் இறங்கிய 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

காக்கிநாடாவில் எண்ணெய் டேங்கரில் இறங்கிய 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
Updated on
1 min read

காக்கிநாடா: ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பெத்தாபுரம் மண்டலம், ஜி.ராகம்பேட்டா பகுதியில் அம்படி சுப்பண்ணா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இங்குள்ள ஒரு டேங்கரை சுத்தம் செய்ய 7 பேர் அதனுள் இறங்கினர். ஆனால் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள், ராமாராவ், கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பஞ்சிபாபு, ஜகதீஷ், பிரகாஷ்என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்துக்கு ஆந்திர அரசு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து ஆலை முன்பு சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in